கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இனை பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் வழங்கும் வைபவம் திருகோணமலையில்
செப்டம்பர் 07, 2021கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இன் நிறைவு தின வைபவம் திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப்பிரிவு தலைமையகத்தில் செப்டம்பர் 02ம் திகதி நடைபெற்றது. இதில் பயிற்சிநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த படை வீரர்களுக்கான சான்றிதழ் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த பயிற்சிநெறி ஆகஸ்ட் 04ம் திகதி சிறப்பு படகு படை தலைமையகத்தில்ஆரம்பமானது. இதில் சிறப்பு படகுப்பிரிவு மற்றும் 4 வது விரைவு தாக்குதல் படகு பிரிவு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 36 கடற்படை வீரர்கள் பங்கேற்றனர். மேலும், இந்த பயிற்சிநெறியில் அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைகளின் செயல்பாட்டுப் பிரிவான அல்பா 1313 இலிருந்து 09 பயிற்சியாளர்களும் பங்குபற்றினர்.
நான்கு வாரங்கள் பயிற்சிக் காலத்தை கொண்ட இந்த பயிற்சிநெறியில் மனித உரிமைகள், ஆயுத மோதலின் சட்டம், சிறிய பிரிவு தந்திரோபாயங்கள், நகர்ப்புற சூழலில் இராணுவ நடவடிக்கைகள், தந்திரோபாய போர் விபத்து பராமரிப்பு, போர் மதிப்பீடு, படை நடவடிக்கைகளை திட்டமிடல், கடல்சார் செயல்பாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. அமெரிக்க இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை வீரர்களின் தொழில்முறை திறன்கள் மற்றும் அறிவு பரிமாற்றத்தை வளர்க்கவும், பாடநெறி நோக்கங்களை பூர்த்தி செய்யவும் இந்த பயிற்சிநெறி உறுதுணையாக அமைந்தது.
கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கிழக்கு கடற்படை பிராந்திய பிரதி தளபதி கொமடோர் ஜனக நிஷங்க சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். மேலும், 4 வது வேகமான தாக்குதல் படகு பிரிவின் கட்டளை அதிகாரி, சிறப்பு படகு பிரிவு கட்டளை அதிகாரி , அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைகளின் செயல்பாட்டுப் பிரிவான ஆல்பா 1313 மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடற்படை வீரர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.