இராணுத்தினரால் வாழ்வாதார மற்றும் மெகா பயிர்ச் செய்கை திட்டம் முன்னெடுப்பு
செப்டம்பர் 16, 2021ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” என்னும் கொள்கைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பங்களிப்பு செய்யும் விதமாக இராணுவ தளபதியின் “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் படையினர் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலாண்மை மற்றும் கால்நடை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இத்திட்டங்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமை இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ் ராஜபக்ச அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விவசாய துறையில் தகுதிபெற்ற 76 அதிகாரிகள் மற்றும் 1675 சிப்பாய்கள், இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை படையினர் இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகம் மற்றும் அதன்ன் கீழுள்ள 1 வது நிரந்த பட்டாலியன் மற்றும் 3 வது தொண்டர் படையணி ஆகியன இணைந்து 8,500 ஏக்கர் பரப்பளவிலான அரச மற்றும் இராணுவ நிலங்களில் இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நெல், மா, தென்னை, மரக்கறிகள், தானிய விதைகள், சோளம், உளுந்து, பருப்பு, மஞ்சள் போன்றன பயிரிடப்பட்டன.
மேலும் 7 ஜனவரி 2020 அன்று இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை படையினரால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் 200 ஏக்கர் பரப்பில் மிளகாய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய ஆண்டிபுளியங்குளம் (50ஏக்கர்), கந்தகாடு (100 ஏக்கர்) இராணுவ பண்ணைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மெனிக் பண்ணையில் (50ஏக்கர்) பரப்பளவில் மிளகாய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் மெனிக் பாரம், ஆண்டிப்புலியங்குளம், கந்தகாடு, பலல்ல மற்றும் பலுபட்டுன, யால ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 300 ஏக்கர் பரப்பளவில் தெங்கு செய்கை (19,500 தென்னை மரங்கள்) முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு 500 ஏக்கர் பரப்பில் மாம்பழங்கள் (19, 800 மரக்கன்றுகள்), இராணுவ பண்ணைகளுக்குள் 20 ஏக்கரில் மஞ்சள், மெனிக் பண்மையில் கலப்பின கோதுமை விதைகள் (25 ஏக்கர்) மற்றும் தானிய விதைகள் மெனிக் பண்ணை (50 ஏக்கர்) இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இராணுவ பண்ணைகளில் பணியாற்றும் படையினருக்கு விவசாய ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை தனது நிபுணத்துவ ஆலோசணைகளை வழங்கி வருகின்றது.
அதேபோல் உள்நாட்டு நுகர்வோருக்கு அவசியமான அரிசியை உற்பத்தி செய்யும் நோக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நெற்பயிர் செய்கை கண்டக்காடு பண்னை , மெனிக் பண்னை மற்றும் இராணுவ தலைமையகத்தை சுற்றி மேற்கொள்ளப்படுவதுடன் அறுவடைகளில் ஏற்கனவே பெறப்பட்ட அரிசி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நலன்புரி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றமையும், மேற்படி அரிசி வகைகள் இரசாயண கலவை மற்றும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படாத வயல்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றான கோழி வளர்ப்பு செயற்பாடுகளும் தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ளன. கந்தகாடு, கல்கந்த, நிரவிய மற்றும் பலல்ல ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் பண்ணைகள் சிலவற்றில் மாத்திரம் 25,000 க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிகள் உள்ளன. இலங்கை இராணுவம். கோழி வளர்ப்பு திட்டம் 2020 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் 5,000 கோழிகளுடன் ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மிகச்சிறந்த உற்பத்தி திட்டமாக உருவெடுத்துள்ளது.
கந்தகாடு இராணுவ பண்ணை வளாகத்தில் உலர் உணவு பொதிகள் உற்பத்தி செயன்முறை என்பனவும் புதிய தரத்தை எட்டியுள்ளன. அதற்கமைய திட்டத்தின் நாளாந்த உற்பத்தி 1000 பொதிகளாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு பெருமளவான அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செலவுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ஊட்டச்சத்து மிக்கதும் நீர்த்தன்மை குறைந்ததுமான உணவுகள் வனப்பகுதிகளில் பணியாற்றும் படையினரால் அதிகம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பால் பக்கெட்டுகள் மற்றும் தயிர் சட்டிகள் போன்ற பால் பொருட்கள் கந்தகாட்டில் தயாரிக்கப்படும் அதேவேளை, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் அனைத்து விற்பனை நிலையங்களினதும் நுகர்வோர் மத்தியில் மேற்படி உற்பத்திகளின் கேள்வி அதிகரித்துள்ளது.
மேலும், யால பலதுபன பகுதியில் உள்ள இராணுவ அயடின் கலந்த தரமான சமையல் உப்பு தயாரிப்பு பண்ணை இலங்கை தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. அத்தோடு அங்கு உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் இராணுவ முகாம்களுக்குள் விநியோகிக்கப்படுவதோடு இலங்கை இராணுவ பொதுச் சேவை படையினரூடாக சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இராணுவத்தின் 'துருமிது நவ ரட்டக்' பசுமை திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தின் காடு வளர்ப்புப் பணிகள் இதுவரை வில்பத்து வனப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் நாடு முழுவதும் தேசிய மரக்கன்றுகள் நடும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழைவீழ்ச்சி குறைந்தளவில் காணப்படும் போது அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமான மர நடுகை திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராணுவத்தின் வேளாண்மை மற்றும் வனவியல் தரப்பினரால் பல்வேறு மற்றும் அரிய மூலிகை மருந்து மரக்கன்றுகள் மற்றும் கிளிடிசிரியா தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. அவை மண்ணில் நைட்ரஜனை மீளுருவாக்கம் செய்ய அவசியமானதாகும். அண்மையில் இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட சேதன பசளை உற்பத்தி செயற்பாடுகளும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் உத்தரவிற்கமைய 2021 ஆம் ஆண்டின் பெரும்போக உற்பத்திக்கு அவசியமான 2500 மெட்ரிக் டொன் சேதன பசளையை உற்பத்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களையும் இராணுவம் ஆரம்பித்துள்ளது. அதன் கீழ் அண்மையில் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தின் தரத்தை அறிவதற்காக அவை விவசாய துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தேன் உற்பத்திக்கான தேனீ வளர்ப்பு திட்டங்களும் சிறந்த பலன்களை அளித்துள்ள நிலையில் தேனீ வளர்ப்பு திட்டங்களுக்கு பொருத்தமான காலநிலை காணப்படும் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதேபோல் வரவிருக்கும் பெரும்போக உற்பத்தி பருவகாலத்தில் இராணுவத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பண்ணைகளில் சுமார் 35,000 முருங்கை, விழாம்மரம், எலுமிச்சை, புளி மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டங்களை இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகம் ஆரம்பிக்கவுள்ளது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமை இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகம் தனித்துவமான உற்பத்திகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது. அதற்காக படையினருக்கான நீண்டகால மற்றும் குறுகிய கால துறைசார் பாடநெறிகள் பாடநெறிகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான தெளிவூட்டல்களும் இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பக பணிப்பாளர் அரோஷா ராஜபக்ச அவர்களின் மேற்பார்வையின் கீழ் 1 வது நிரந்த படையினர் 3 வது தொண்டர் படையினரின் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
நன்றி - www.army.lk