சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறாமீனின் பாகங்களை கொண்டுசென்ற லாெறிவண்டி கடலோர பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது
செப்டம்பர் 10, 2021சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுறா மீன்களின் உடற் பாகங்களை லொறி வண்டியில் கொண்டு செல்வதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நடவடிக்கை உடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு படைவீரர்களின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 185.2 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட சுறா மீனின் உடற்பாகங்கள் குறித்த லொறி வண்டியின் குளிரூட்டல் பகுதியில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள சுறா மீனின் உடல் பாகங்கள் பலநாள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த பல படகுகளில் இருந்து சேகரிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்டுள்ள லொறி வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு பேருவளை கடற்தொழில் திணைக்கள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.