எசல பெரஹெர நிகழ்வினது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு செயலாளர் கண்டி விஜயம்
ஆகஸ்ட் 04, 2019நாளை ஆரம்பமாகவுள்ள எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தெரிவித்தார். எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காகவும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை சந்திப்பதற்காகவும் கண்டி நகருக்கு இன்றையதினம் (ஆகஸ்ட், 04 ) விஜயம் செய்தபோதே, பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
தலதா மாளிகை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சமய மற்றும் கலாச்சார நிகழ்வினை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கான பாதுகாப்பை வலுப்படுத்த அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவ் ஆண்டு எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுக்கென, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் பல பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரஹெரவில் பங்குபற்றும் கலைஞர்களுக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்பு அடையாள அட்டைகளை அணிந்தவாறு அவர்கள் கலாச்சார நிகழ்வில் பங்குகொள்கின்றனர். மேலும், நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும், பெரஹெர ஊர்வலம் இடம்பெறும் பாதையில் வசிப்பவர்களின் அடையாளமும் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து பாதுகாப்பு பணிகளும் முப் படையினர், பொலிஸ், விஷேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைக்கும் விஷேட நடவடிக்கை அறை மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்விஜயத்தின் போது பாதுகாப்பு செயலாளர், இந்நிகழ்வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு படையினர், பொலிஸ் மற்றும்தலதா மாளிகை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார். மேலும் அவர், பாதுகாப்பு விவரங்கள் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் விசாரித்தறிந்து கொண்டதுடன் பத்து நாட்கள் நீடிக்கும் வெற்றிகரமாக நிறைவடையும் வரை மக்களுக்கும் இடங்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பதில் கடமையாற்றும் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், தலதா மாளிகையின் தியாவதன நிலமே மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.