கடலோர பாதுகாப்பு படை சர்வதேச பயிற்சியை வழங்குகிறது
செப்டம்பர் 15, 2021மேற்கு ஆப்பிரிக்க நாட்டு படைவீரர்களுக்கு, விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்துபறிமுதல் செய்யும் பயிற்சி நெறியின் ஆரம்ப கட்ட பயிற்சி, அண்மையில் கடலோர பாதுகாப்பு படையினரால்,மிரிஸ்ஸ, உயர் பயிற்சி மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டத்திற்கமைய இந்தப் பயிற்சி நெறியின் வழங்கப்படுவதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நட்பு வெளிநாட்டு சட்ட அமுலாக்க நிறுவன அதிகாரிகளுக்கான இந்தப் பயிற்சி நெறி செப்டம்பர் 13ம் திகதி ஆரம்பமானது.
இதற்கமைய, விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்து பறிமுதல் செய்யும்பயிற்சி நெறி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்து பறிமுதல் செய்யும்பயிற்சி நெறி என இரண்டு கட்டங்களாக குறித்த பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயிற்சி நெறியின் நிறைவு நாள் வைபவம் ஒக்டோபர் 08ம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இந்த வைபவத்தில் இராஜதந்திரிகள், கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.