கிளிநொச்சி படையினர் உள்ளூர்வாசிகளுக்கு உதவி
ஆகஸ்ட் 05, 2019கிளிநொச்சியில் உள்ள படைவீரர்கள் அங்குள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அவர்களுக்குத் குடிநீரை சேமித்து வைக்கும் நீர் தாங்கிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உருத்திரபுரம், குமாராபுரம் மற்றும் உமயலபுரம் ஆகிய கிராமங்களில் 3000 லிட்டர் கொள்ளளவுகளையுடைய மூன்று பிளாஸ்டிக் நீர் தாங்கிகளை நிறுவியுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது குடிநீர் தேவை தொடர்பாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந் நலன்புரி நடவடிக்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. இப்பகுதிகளில் நீடித்த வறட்சி நிலவுவதன் காரணமாக அங்குள்ள படை வீரர்கள் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து தண்ணீரை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, கிளிநொச்சி மருத்துவமனையில் இலங்கை வங்கியினால் அண்மையில் (ஆகஸ்ட், 01) ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வில் 60 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.