--> -->

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துகிறது

செப்டம்பர் 17, 2021

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நேற்றைய தினம் (செப்டம்பர், 16) வேரஹெராவில் நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய விடுதி கட்டிடத்தின் நிர்மாணப் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை 250 நாட்களில் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் நிலத்தின் கொடையாளர் மாலினி கொத்தலாவல ஆகியோர் கலந்து கொண்டனர்.