மற்றொருதொகுதிஹெராேயின் போதைப்பொருள் ஏற்றப்பட்ட கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
செப்டம்பர் 18, 2021170 கிலோ 866 கிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றினை இலங்கை கடற்படை கைப்பற்றியதுடன் அதனை இன்று காலை (செப்டம்பர், 18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்தது.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை கப்பல் சிந்துரால, நாட்டின் தென்முனையில் இருந்து சுமார் 800 கடல் மைல் (சுமார் 1481 கிலோமீற்றர்) தொலைவில் சென்று கொண்டிருந்த ஒன்பது வெளிநாட்டு சந்தேக நபர்களுடன் போதைப்பொருள் ஏற்றப்பட்ட கப்பலை பிடித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 1575 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிபட்ட கப்பல் மீன்பிடி கப்பல் என்ற போர்வையில் சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டவாறு நாட்டுக்குள் போதைப்பொருட்களை கடத்த திட்டமிட்டிருந்தாக கடற்படை சந்தேகிக்கிறது.
இதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல் மற்றும் பொலிஸ் புலானாய்வுப் பிரிவினரின் புலனாய்வு தகவல்கள் என்பன இந்த வெற்றிகரமான கடல் நடவடிக்கைக்கு வழிவகுத்தது என கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினரின் இந்த நடவடிக்கை கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாகவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை எதிர்த்துப் போராடுவதற்கும் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) உந்து சக்தியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.