--> -->

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பிற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது - பாதுகாப்பு செயலாளர்

செப்டம்பர் 19, 2021

கடற்படை, பொலிஸ் புலனாய்வு பிரிவுடன் ஒன்றினைந்து இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில், 1,575 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 170 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஹெராேயின் போதைப்பொருளை எடுத்துச் சென்ற வெளிநாட்டு மீன்பிடி படகினை கைப்பற்றி (செப்டம்பர், 18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.


மீன்பிடி படகு என்ற போர்வையில் நாட்டின் தெற்கே சுமார் 800 கடல் மைல் (சுமார் 1574 கிலோமீற்றர்) தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டவாறு இருந்த போதைப்பொருள் ஏற்றப்பட்டிருந்த படகே இவ்வாறு கைப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இலங்கையில் போதைப்பொருள் பாவனை இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் கடற்படை, இது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.


போதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படை மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) உறுதிப்படுத்தினார்.


நாட்டிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் கொண்டு வரப்படும் அனைத்து மார்க்கங்களும் புலனாய்வு பிரிவினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் மேலும் கட்டுப்படுத்தப்படும் எனவும பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.