வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான வன சஞ்சார போரிடல் பயிற்சி மற்றும் ஹெலிகொப்டர் மூலமான போரிடல் பயிற்சிகள் நிறைவு
செப்டம்பர் 19, 2021இலங்கை விமானப்படை, பங்களாதேஷ், மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான இல.02 வன சஞ்சார போரிடல் பயிற்சி மற்றும் ஹெலிகொப்டர் மூலமான போரிடல் பயிற்சி என்பவற்றை உள்ளடக்கிய பயிற்சிநெறியை மொரவெவ விமானப்படை நிலையத்தில் உள்ள சிறப்புப் பயிற்சிப் பாடசாலையில் நடத்தியது.
தேடல் மற்றும் மீட்பு, விஷேட செயல்பாடுகள் மற்றும் முறைமைகள், விமானங்கள் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்முறை அடவை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டு நட்பு நாடுகளின் செயல்திறன் அம்சங்களில் பரஸ்பர விழிப்புணர்வை அதிகரிக்கின்றதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சி நெறியில்,விமானப் பழக்கப்படுத்தல், ஹெலி மார்ஷலிங், உள்ளிடல், பிரித்தெடுத்தல், ராப்பெல்லிங், அப்செய்லிங், ஸ்டெபிலைஸ் செய்யப்பட்ட உடல், விஷேட ரோந்து நடவடிக்கை, தரையிரக்க வலயம மற்றும் தரையேற்ற வலயம் தெரிவு மற்றும் விமான அவசரநிலை நடைமுறைகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்ததாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன,
இந்தப் பயிற்சி நடவடிக்கை, கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய முன்னெடுக்கப்பட்டதாக ப விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.