கடற்படையின் உதவியுடன் ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் “அதிபூரம் பூஜை”
ஆகஸ்ட் 05, 2019அண்மையில் (ஆகஸ்ட், 03) நைனாதீவிலுள்ள ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவிலின் வருடாந்த இந்துமத நிகழ்வான “அதிபூரம் பூஜை” இடம்பெற்றது. இப்பூஜையினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு வடக்கிலுள்ள இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடாந்த பூஜையில் கலந்துகொள்ள வருகைதரும் பக்தர்களுக்கு குரிகட்டுவான் முதல் நைனாதீவு ஆகியவற்றுக்கு இடையிலான படகு சேவைகளை கடற்படை வீரர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, பக்தர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் அதிவிரைவு பதில் மீட்பு மற்றும் அனர்த்தப் பிரிவினர் உயிர்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இப்பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களாலும் முன்னெடுக்கப்படும் இவ்வாறான முக்கிய மத நிகழ்வுகளுக்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதுடன், அவர்களின் சேவைகள் அனைத்து சமூகங்களினதும் பாராட்டையும் பெற்றுள்ளது. கச்சத்தீவின் வருடாந்த புனித அந்தோனியார் உற்சவம் அவ்வாறான மற்றுமொரு முக்கிய மத நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.