கடலோர பாதுகாப்பு படையினரால் ஏனைய படைவீரர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி
செப்டம்பர் 20, 2021இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்களினால் இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களுக்கு அடிப்படை நிலை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறித்த பயிற்சி நெறி பலபிட்டியவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பயிற்சி நெறியில் இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்களும் விமானப்படையைச் சேர்ந்த பத்து வீரர்களும் கலந்து கொண்டு அடிப்படை நிலை உயிர்காப்பாளராக சேவையாற்ற தகுதி பெற்றதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
உயிர் காப்பாளர்கள் தொழில்முறை ரீதியாக தக்க தருணத்தில் தமது சேவையினை வழங்குவது அந்தந்தப் படைகளுக்கு ஒரு அனுகூலமாக அமைவதுடன் உயிர்காப்பு தொடர்பாக ஏனையோருக்கும் தமது அறிவினை பகிந்தளிப்பதாக அமையும் எனவும் கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிகழ்வு, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.