மன்னாரில் 68 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
செப்டம்பர் 22, 2021மன்னார், நறுவிலிக்குளம் பகுதியில் கடற்படையினரால் நேற்றைய தினம் (செப்டம்பர், 21) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 228 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா, 103 பொதிகளில் பொதி செய்யப்பட்டு ஆறு சாக்கு பைகளில் அடைக்கப்பட்டு இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கை கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாகவும் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.