வெலிஓய பாடசாலையில் கடற்படையினரால் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் நிர்மாணிப்பு
ஜூன் 24, 2019இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிறுநீரக பாதிப்பினை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் அவற்றினை தடுக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று கடற்படையினரால் பரணகம வெவ வித்தியாலயத்தில் நிறுவப்பட்டது. இலங்கை கடற்படையின் சொந்த நிதிமூலத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் பயன்பெறுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்ததாக இலங்கை கற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான விஷேட நிபுணதத்துவ பிரிவினால் நிர்மாணிக்கப்பட்ட இதுபோன்ற திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் இதுவரை 600 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் செயற்றிட்டம் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கை கடற்படையின் சொந்த நிதிமூலத்தில் இருந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு பின்னர் சிறுநீரக நோய்கள் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியன நிதி பங்களிப்பு செய்தன.
இலங்கை கடற்படையினரால் சிறுநீரக நோய்கள் தோன்றும் அபாயம் மிகுந்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட குறித்த இத் திட்டத்தின் மூலம் மாடுமுளுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.