கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் காயமுற்ற மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்
செப்டம்பர் 28, 2021இலங்கை கடற்படை, ஜூலை 26ம் திகதி பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்தபோது காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது.
காயமுற்ற குறித்த மீனவர், திருகோணமலையில் இருந்து சுமார் 30 கடல் மைல் (அண்ணளவாக 55 கிமீ) தொலைவில் உள்ளூர் மீன்பிடி படகில் நடுக்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தையடுத்து காயமடைந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமுற்று மீனவர் தரித்திருந்த இடத்திற்கு வருகை தந்த கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் உள்ள மீனவரை கைப்பற்றி கடலோர பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
'சுது ருவன் 3' எனும் மீன்பிடி படகு அம்பலங்கொட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 19ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்று இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.