தெற்கு சூடானில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு நாடு திரும்பவுள்ள படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு

ஒக்டோபர் 02, 2021

தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு நாடு திரும்பவுள்ள இலங்கை இராணுவ வீரர்களுக்கு அண்மையில் தெற்கு சூடானை தளமாகக் கொண்ட வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

படையினருக்கு பதக்கம் அணிவிக்கும் இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைகளின் பிரதி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மைன் உல்லா செளதுரி விஷேட அதிதியாக கலந்துகொண்ட அதேவேளை, கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள படை தலைமையக உயர் அதிகாரிகளும் பங்கேற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைபவ தளத்திற்கு வருகை தந்த அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைகளின் பிரதி கட்டளைத்தளபதியை தெற்கு சூடானில் வைத்திய நடவடிக்கைகளை இரண்டாம் நிலை வைத்திசாலை படைவீர்களின் கட்டளை அதிகாரி கேர்ணல் டீஆர்எஸ்ஏ ஜெயமான வரவேற்றார்.

மேலும், இந்த நிகழ்வில் தெற்கு சூடானில் வைத்திய நடவடிக்கைகளை இரண்டாம் நிலை வைத்திசாலை படைவீர்களினால் அணிவகுப்பு கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சி என்பனவும் அரங்கேற்றப்பட்ட தாக இராணுவம் தெரிவித்துள்ளது.