அரச புலனாய்வு சேவை தனது 80 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

ஒக்டோபர் 03, 2021

அரச புலனாய்வு சேவை தனது 80வது ஆண்டு நிறைவு விழாவை ஒக்டோபர் மாதம் 01ம் திகதியன்று மிக எளிமையான முறையில் கொண்டாடியது.

கெரவிட் - 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெற்ற இந்த விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அரச புலனாய்வு சேவை தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் போர்வீரர் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்தலுடன் ஆரம்பமான இந்த விழாவில், தாய் நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்கள் நினைவுகூரப்பட்டதுடன் புலனாய்வு சேவை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி சமய நிகழ்வுளும் இடம்பெற்றன.

1940களின் முற்பகுதியில் தோற்றம் பெற்ற அரச புலனாய்வு சேவை, 1941ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ம் திகதி குற்றவியல் விசாரனைப் பிரிவின் கீழ் ஒரு விஷேட பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் கட்டமைப்பு ரீதியாகவும் பெயர் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்குள்ளான இந்தப்பிரிவு, இறுதியாக அதன் தற்போதைய பெயரில் 2006ம் ஆண்டிலிருந்து அறியப்படுவதுடன் அது, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் காத்திரமான வகிபாகத்தை வகித்தும் வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) வழிகாட்டுதலுக்கு அமைய அரச புலனாய்வு சேவை, தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் தொலைநோக்கு திட்டத்திற்கமைய புதிய பரிமாண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் நாட்டில் வளர்ந்துவரும் எதிர்கால தேவைகளுக்கேற்ப அரச புலனாய்வு சேவை, புதுமைகளை ஏற்று, தனது ஆளனியினருக்கு தொழில்வாண்மை மற்றும் திறன் மேம்பாடு என்பவற்றை வழங்கி மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்தி உகந்த பணிச்சூழலை உருவாக்கியுள்ளது.

80 ஆண்டுகளின் மைல்கல்லை எட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘அமுத விழா’ கொண்டாட்டங்கள் அரசு புலனாய்வு சேவையின் கீர்த்திமிக்க வரலாறு மற்றும் சேவைகள் குறித்த “சைலண்ட் கார்டியன்ஸ்” எனும் புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்த புத்ததத்தின் முதல் பிரதி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்னவிற்கு வழங்கி வைக்கப்பட்டது. மேலும், புதிதாக இயற்றப்பட அரச புலனாய்வு சேவையின் தொனிப்பொருள் பாடலும் இதன்போது இசைக்கப்ட்டது. நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூருவது, அந்த குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான சேவையை நீட்டித்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சேவையில் உள்ளவர்களின் சேவையைப் பாராட்டுதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றும் உயர் கல்வி சாதனைகளுக்காக அதிகாரிகளின் குழந்தைகளுக்கு வெகுமதியளித்தல் மற்றும் ஊக்குவித்தல் என்பனவும் இதன்போது இடம்பெற்றது.

இந்த விழாவின் போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், மூன்று தசாப்தங்களாக தாயகத்தில் அமளிதுமளிகள் மற்றும் இரத்தக்களரியை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளை தோற்கடிக்க மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தேசிய புலானாய்வு சேவையினால் வழங்கப்பட்ட அளப்பரிய சேவையை நினைவு கூர்ந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தேசிய புலனாய்வு சேவையின் விலைமதிப்பற்ற சேவையும் பாதுகாப்புச் செயலாளர் பாராட்டினார்.

ஜனாதிபதியின் தொலைநோக்கு திட்டத்திற்கு ஏற்ப தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக தேசிய புலனாய்வு சேவையும் பிற புலனாய்வு சேவைகளும் முதன்மையாக பயங்கரவாத மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்ற அதேவேளை, அவர்களின் செயல்பாட்டுத் துறையை விரிவுபடுத்தல், சுகாதாரம், உணவு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிற துறைகளில் எதிர்பார்த்த விளைவுகளை அடைய சேவைகள் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வு சேவை பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, தேசிய புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க (ஓய்வு) மற்றும் முப்படைகளின் புலனாய்வுப் பிரிவிக் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.