யாழ் குடாநாட்டில் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நடுகை
ஒக்டோபர் 05, 2021யாழ் தீபகற்பத்தில் உள்ள சதுப்புநிலத்தை பாதுகாத்தல் மற்றும் கடலோர அரிப்பை தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் அண்மமையல கிலாலி சதுப்பு நிலப்பகுதியில் கண்டல் தாவர கன்றுள் நடப்பட்டது.
இதற்கமைய, யாழ் தீபகற்பத்தில் உள்ள சதுப்புநிலப் பகுதியில் சுமார் 5000 மரக்கன்றுகளை நடும் கடற்படையின் திட்டத்திற்கமைய குறித்த திட்டம் வடக்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் பேரில் இடம்பெற்றது.
கொவிட் -19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.