--> -->

இராணுவத்தினரால் யாழில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

ஆகஸ்ட் 06, 2019

இலங்கை இராணுத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று யாழில் வசிக்கும் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு அண்மையில் (ஆகஸ்ட், 05) வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போது குறித்த வீட்டின் பயனாளி குடும்பமான திருமதி. ராஜரத்தினம் ஜயகுமாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஜபாகு படைப்பிரிவின் 15 இராணுவ வீரர்களின் நிபுணத்துவம் மற்றும் திறன் ஆகியவற்றின்மூலம் இரண்டு படுக்கை அறைகளைக்கொண்ட குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இவ்வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியினை திரு. பாத்திய ஜயக்கொடி மற்றும் திரு. சிந்தக டி சொயிஷா ஆகியோர் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டுக்கு தேவையான புதிய தளபாடங்களையும் வழங்கியுள்ளனர்.

நேற்று இந்துமத மரபுகளின் பிரகாரம் புதிய வீடு கையளிக்கும் நிகழ்வில், யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி, மேஜர் ஜெனெரல் ருவன் வணிகசூரிய, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.