விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் எசலா பெரஹெர தொடர்கிறது
ஆகஸ்ட் 07, 2019கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட், 05) ஆரம்பமான வருடாந்த எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுகளின் மூன்றாவது நாள் இன்றாகும் (ஆகஸ்ட், 07). கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முப்படைவீரர்கள், பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர், மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படை வீரர்கள் ஆகியோர் போதுமான எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மீளாய்வுகளை மேற்கொள்ளும் வகையில் முப்படை தளபதிகள், பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர், மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படை வீரர்கள் ஆகியோருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
அத்துடன், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்வினை கண்டுகளிக்க நாட்டின் பலபாகங்களிலும் இருந்து நகருக்குள் வருகைதரும் பக்தர்களின் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்க சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்களினதும் நகரத்தினதும் உயர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வீதித்தடைகள் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கும்பல் பெரஹெர உடன் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட், 05) ஆரம்பமான கண்டி எசல பெரஹெர எதிர்வரும் 15ஆம் திகதி இறுதிநாள் ஊர்வலநிகழ்வுடன் நிறைவுபெறும். பண்டைய காலங்களுடன் ஒரு வரலாற்றை கொண்ட எசலா பெரஹெர நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய வருடாந்த மத நிகழ்வுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.