சந்தஹிருசேய தூபி நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் மீளாய்வு
ஒக்டோபர் 09, 2021அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் என்பனவற்றை மீளாய்வு செய்யும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் (ஒக்டோபர், 09) நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் திட்ட அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் போதிகாராய அரசமர இல்லம், ஆண்டின் 12 மாதங்கள் முழுவதும் எரியும் விளக்கு மற்றும் தரைத்தோற்ற அமைப்பு, பக்தர்களுக்கான வாகன தரிப்பிடம், நுழைவாயில் அமையப்பெறும் இடம், விஹாரை மண்டபத்தின் வேலைப்பாடுகள் மற்றும் உத்தேச அருங்காட்சியகம் என்பன குறித்து குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய குறித்த நிர்மாணப் பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றமை ஒரு விஷேட அம்சமாகும்.
நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் வழிபாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டட பின்னர் சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பன இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தூபியில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.