சந்தஹிருசேய புனித வஸ்த்துக்கள் செவ்வாயன்று கடம்பே ஸ்ரீ ரஜபவராமயவை சென்றடையும்
ஒக்டோபர் 11, 2021சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 12) கடம்பே ஸ்ரீ ரஜபவராமயவை சென்றடையவுள்ளது.
கண்டி மல்வத்து மஹா விஹாரையில் இடம்பெற்ற சமய கிரிகைகளின் பின்னர் ஆரம்பமான சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி, டீ எஸ் சேனநாயக்க வீதி, மஹையாவ, வடபுலுவ, லேவல்ல, லேவல்ல பாலம், சிரிமல்வத்த, அம்பலாம, மடவளை, பொல்கொல்ல, கட்டுகஸ்தோட்டை பாலம், ஹாலொலுவ, அனிவத்த மற்றும் இஹல கடுகொல ஆகிய பிரதேசங்களைக் கடந்து இன்று (ஒக்டோபர், 11) மாலை கண்டியில் அமைந்துள்ள அஸ்கிரிய மஹா விஹாரை மஹா பிரிவெனவை சென்றடையவுள்ளது.
குறித்த வாகன பவனி வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும் இடம்பெறுகின்றன.
கடுமையான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி இடம்பெறும் இந்த வாகன பவானியின் போதான போக்குவரத்து நடவடிக்கைகள், அந்தந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.