மற்றுமொரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மஹர பிரதேசத்தில் கடற்படையினரால் ஸ்தாபிப்பு

ஒக்டோபர் 11, 2021

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மஹர, பக்மீகஹவத்தை பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 10) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டு குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பாவனைக்காக கையளித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், கடற்படையின் ஆளணி மற்றும் நிபுணத்துவம் என்பவற்றை பயன்படுதி கடற்படை சேவா வனிதா பிரிவின் ஒருங்கிணைப்ப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 875 வதுகுடிநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்திற்கு டீபி சிலோனின் திரு. தனஞ்சய பண்டாரவினால் நிதி உதவி அளிக்கப்பட்டது.

இந்தப் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் மூன்று கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்த 975 குடும்பங்கள் தூய சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும் என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.