இந்திய இராணுவத் தளபதி நாளை இலங்கை வருகை

ஒக்டோபர் 11, 2021

ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தலைமையிலான உயர் மட்ட தூதுக் குழு நாளை (ஒக்டோபர், 12) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில்  இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி  ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, ஜனாதிபதி, பிரதமர், தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் முப்படை தளபதிகள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்..

இந்திய இராணுவ தளபதியின் பாரியார் திருமதி வீணா நரவானே உட்பட வருகை தரும் பிரமுகர்கள் மாதுரு ஓயா விஷேட படை பயிற்சி பாடசாலையில் இடம்பெறவுள்ள இரு நாட்டு இராணுவத்தின் கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி' பயிற்சியின் இறுதி நிகழ்வினை கண்டு களிக்கவுள்ளனர்.