நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 07, 2019

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி ஜோஅன்ன கெம்கர்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (அகஸ்ட், 07) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, இருவருக்கிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.