வவுனியா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் இரத்த தானம் நிகழ்வு முன்னெடுப்பு
ஒக்டோபர் 13, 2021வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் அண்மையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள இரத்த வங்கி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.
தேரர்கள் மற்றும் 213 படைப்பிரிவு, இயந்திரவியல் காலாட்படையின் 2 வது பட்டாலியன் படைப்பிரிவு, இலேசாயுத காலாட்படையின் 5 வது பட்டாலியன் , 4 வது பட்டாலியன் தேசிய பாதுகாப்பு மற்றும் இயந்திரவியல் காலாட்படை பயிற்சி மையம் என்பவற்றில் சேவையாற்றும் படைவீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தில் வவுனியா பொது வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது.