இந்திய இராணுவ தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 13, 2021

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தலைமையிலான இராணுவ உயர் மட்ட தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஒக்டோபர், 13) சந்தித்தது.

 நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத்தளபதி மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கை குறித்து சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய இராணுவ தளபதி ஆகியோரின் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு, இந்திய இராணுவத் தளபதி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட தூதுக்குழு நேற்று (ஒக்டோபர் 12) இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.