--> -->

ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் விமானப்படையினரால் அரச வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பு

ஒக்டோபர் 16, 2021

விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் சில ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் அரச வைத்தியசாலைளில் பயன்படுத்துவதற்காக சுகாதார பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த ஒக்சிஜன் தெரபி உபகரணங்கள் அம்பாறை, பதுல்லை, களுத்துறை மற்றும் பொல்கஸோவிட்ட ஆகிய வைத்தியசாலை அதிகாரிகளிடம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரனவினால் அண்மையில் கையளிக்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.


இந்த ஒக்சிஜன் தெரபி உபகரணங்கள் தயாரிப்பிற்கு, ஹீல் லங்காவின் டொக்டர் அசோகா, நுகேகொடசெத் சந்தன மெத் சமாஜசத்காரயவின் தலைவர் திரு.ரஞ்சித் தென்னகோன், திரு.நவின் குணதிலக மற்றும் திருமதி டபிள்யூஆர்எம் பெரேரா ஆகியோர் நிதி பங்களிப்பை வழங்கியதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க, விமானப்படையின் பொதுப் பொறியியலாளர் பிரிவு, இரத்மலானை விமானப்படையின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் மின்னணு வடிவமைப்பு பிரிவும் இணைந்து  இந்த ஒக்சிஜன் தெரபி உபகரணங்களை தயாரித்திருந்தது.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.