--> -->

“2020-2025 முன்னோக்கு வழி மூலோபாய” திட்டத்தினூடாக 1 இலங்கை இராணுவ படையணி உறுவாக்கம்

ஒக்டோபர் 17, 2021

இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு, விசேட அதிரடிப் படயைணி மற்றும் ஏனைய படையணிகள் ஆகியவற்றினை இணைத்து உறுவாக்கப்பட்ட 1 இலங்கை இராணுவ படையணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (17) காலை சாலியபுர கஜபா படையணித் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதியின் “முன்னோக்கு வழி மூலோபாய 2020-2025’’ திட்டக் கொள்கையின் ஒரு அங்கமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு செயலாளருமான ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) அவர்கள் ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறையின்பிரகாரம் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

"வேகம், சக்தி, தைரியம்" என்ற நோக்கக்கூற்றினை அடிப்படையாக கொண்டு உறுவாக்கப்பட்ட மேற்படி படையணியின் சின்னத்தினை இலங்கை இராணுவத்தின் 1 படையணி படையினருக்கு பாதுகாப்பு செயலாளர் அவர்கள் பாதுகாப்பு, பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஆகியோருடன் இணைந்து அணிவித்தார்.

அன்றைய விழாவின் போது 1 இலங்கை இராணுவ படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கான படையணி சின்னத்தினை ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்கள் அணிவித்து வைத்ததுடன் அப்படையணியின் கொடியையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கலாச்சார நடனக் கலைகளும் நடைபெற்றது. கிளிநொச்சியில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து செயல்படும் இலங்கை இராணுவ 1 படையணியின் அதிகாரப்பூர்வ வலையமைப்பினை அன்றைய தலைமை விருந்தினர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆரம்பித்து வைத்தார்.

அதிமேதகு ஜனாதிபதியின் “சௌபாக்கிய” தேசியக் கொள்கைக்கு இணையாக ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் இந்த முயற்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து விருந்தினருக்கான நினைவுப் பதிவேட்டில் தனது கருத்தினை பதிவிட்டார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை இராணுவ 1 படையணியின் தலைமையகத்தில் உள்ள படையினர் இணையவழி தொழில்நுட்பத்தினூடாக சாலியபுரவில் நடைபெற்ற நிகழ்வினை பார்வையிட்டனர்.

1 படையணியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகிய இருவருக்கும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார். இந்த புதிய 1 படையணியானது 53 வது படைப்பிரிவு , 58 வது படைப்பிரிவு , கொமாண்டோ படையணி, சிறப்புப் படையணி பிரிகேட் , எயார் மொமைல் பிரிகேட் , காலாட்படை பிரிகேட் மற்றும் கிளிநொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏனைய படையணிகளை உள்ளடக்கி உறுவாக்கப்பட்டுள்ளதோடு, எதிர்பாராத சூழ்நிலைகளை நிவர்த்தி செய்ய அல்லது திடீர் குழப்பங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் முக்கிய இராணுவப் படையில் இருந்து அழைப்பின் பேரில் செயல்பட உதவியாக அமையக் கூடிய வகையில் சிறந்த படையணியாக செயல்படும்.

கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு மற்றும் சிறப்பு அதிரடி படையணி ஆகிய படையணிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தாலும் மேற்குறித்த படையணிகள் 1 படையணியுடன் இணைத்து சமகால பாதுகாப்பு இயக்கவியல், இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், தொற்றுநோய்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்த தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயலற்பாடுகளுக்கு ஒரு சக்தியாக உயர்தர இராணுவ படையணியாக உறுவாக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இராணுவத் தளபதியின் தொலைநோக்கு 'முன்னோக்கு வழி மூலோபாயம் 2020-2025' என்பது போர் ஒத்துழைப்பு மற்றும் போர் சேவை ஒத்துழைப்பு படையினருடன் ஒருங்கிணைந்த மற்றும் தேவையான கூட்டு நடவடிக்கைகளுடன் பொருத்தமாக குழுவாக இருக்கும் முகமாக தேசம் மற்றும் படையினரின் பாதுகாப்பிற்கான சக்தியாக பல்வகைப்பட்ட தற்செயல் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்த சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவினரை வைத்திருக்கும்.

இந்நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


நன்றி - www.army.lk