உடுப்பிட்டியில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு

ஒக்டோபர் 20, 2021

யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் ஆளணி மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு உடுப்பிட்டி, இமயயானன் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

தெற்கில் உள்ள நன்கொடையாளர் திரு. குமார வீரசூரிய மற்றும் அவரது சகாக்களின் நிதி உதவியுடன் 4வது சிங்க ​​ரெஜிமென்ட் படைவீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய வீடு, உடுப்பிட்டியில் உள்ள திருமதி. செல்வசன்னதி தர்ஷனியிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற புதுமனை குடிபுகு விழாவில், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், படைவீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.