கடுமையாக சுகவீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவி

ஆகஸ்ட் 08, 2019

இரணைதீவு பகுதியல் பாம்புக்கடி காரணமாக உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் (ஆகஸ்ட், 06) உதவியளித்துள்ளனர். குறித்த பகுதியில் நிர்கதியான நிலையில் நபர் ஒருவர் காணப்படுவதை அவதானித்த இரணைதீவு கடற்படை வீரர்கள் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைவாக வட மத்திய கடற்படை கட்டளையாகத்தின் மூலம் குறித்த பகுதிக்கு கரையோர ரோந்துப்படகு ஒன்று மருத்துவ பணியாளர்களுடன் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 64 வயது மதிக்கத்தக்க இரனமாதா பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரே ஆரம்பகட்ட மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் விரைவாக கரைக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக முழங்காவில் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தக்க தருணத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சிரத்தை காரணாமாக அவர் மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது.