வடிடுவாக் முதல் கொக்கிலாய் வரையான கடற்கரைப் பிரதேசம் படையினரால் தூய்மையாக்கம்

ஒக்டோபர் 23, 2021

தூய்மையான மற்றும் பாதுகாப்பான கடற்கரை சூழலை உருவாக்கும் நோக்கில் இராணுவ வீரர்களினால் வடிடுவாக் முதல் கொக்கிலாய் வரையான கடற்கரையோர பகுதியை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த பணிகளில்  முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 12வது இலங்கை இலேசாயுத காலாட்படை, 24வது இலங்கை சிங்க படை, 19வது கெமுனு வோட்ச்  மற்றும் 5 வது இலங்கை சிங்க படைகளைச் சேர்ந்த  படைவீரர்கள் பங்கெடுத்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் துய்மையாக்கள் திட்டத்தில் முல்லைத்தீவு பிரதேச சபையினால் கிடைக்கப்பெற்ற உழவு இயந்திரங்களின் உதவியுடன் கடற்கரையிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பொலித்தீன் போன்ற கடல் மாசுக்கள் அகற்றப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.