முலங்காவிலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு

ஒக்டோபர் 30, 2021

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு வெள்ளாங்குளம், முலங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. முத்து குமார் யஸீதா குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

65வது பிரிவு, 651வது பிரிகேட்டின் உள்ள 19வது இலேசாயுத படையணி படைவீரர்களின் ஆளணி மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவம் மூலம் நிர்மாணிக்கப்ட்ட இந்த புதிய வீட்டிற்கு தென் பகுதியைச் சேர்ந்த பல தனவந்தர்கள் நிதிஉதவி அளித்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற புதுமனை குடிபுகு விழாவில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.