கடற்படையின் கயன்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனைகளை படைத்தார்
ஒக்டோபர் 31, 2021சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெற்ற 99 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை கடற்படை வீராங்கனை கயன்திகா அபேரத்ன, மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளை படைத்தார்.
அவர் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டபோட்டியில் போட்டி தூரத்தை 4 நிமிடங்கள் மற்றும் 9.12 வினாடிகளில் (4: 9.12) பூர்த்திசெய்து புதிய தேசிய சாதனையை படைத்ததுடன் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் போட்டி தூரத்தை 15 நிமிடங்கள் மற்றும் 55.84 நொடிகளில் (15: 55.84) பூர்த்தி செய்து மற்றுமொரு தேசிய சாதனையை படைத்ததாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படை வீராங்கனை அபேரத்ன, தைபேயில் நடைபெற்ற 2017 தைபே நகர ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம், இந்தியாவில் நடைபெற்ற 2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் அதே சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.