பாதுகாப்பு செயலாளருக்கு 'பொப்பி மலர் ' அணிவிப்பு

நவம்பர் 01, 2021

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் (ஒய்வு), பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு (ஒய்வு) 'பொப்பி மலர்’ அணிவிக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர்,01) இடம் பெற்றது.

இன்று பிற்பகல் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோதே பொப்பி மலர் பாதுகாப்பு செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது.

மேலும், இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் சஞ்சிகையின் பிரதி ஒன்று இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்டது.

 இந்த ஆண்டு 77வது முறையாக இந்த நினைவு தினம்   இலங்கையில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

'பொப்பி மலர் தினம்'  முதலாம் உலகப் போரின் போது உயிர் தியாகம் செய்த ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் வகையில் பொதுநலவாய நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் ஒரு நினைவு நாள் ஆகும்.

இந்த நிகழ்வில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் பொது செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் (ஓய்வு) அஜித் சியம்பலாப்பிட்டிய, லெப்டினன்ட் கேர்ணல் தீபால் சுபசிங்க, மேஜர் ஷாந்திளால் கண்கமகே உள்ளிட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், போர் வீரர்கள் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.