புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு
நவம்பர் 06, 2021பனாகொட இராணுவப் பாசறையில் உள்ள இலங்கை காலாட்படை கேட்போர் கூடத்தில் இன்று (நவம்பர், 06) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கலந்து கொண்டார்.
ஜெனரல் சாந்த கோட்டேகொடவினால் (ஓய்வு) எழுப்பட்ட 'தெ கொன்பிளிக்ட் தட் எலுடெட் பீஸ்’ எனும் புத்தக வெளியிட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் அதன் முடிவு தொடர்பாக இந்நூல் சுருக்கமாகக் கூறுகிறது. நூலாசிரியர் தனது படைப்பில், போரியல் வரலாற்று பக்கங்களுக்கு இடையில் மறக்கப்பட்ட முப்படை, சிவில் பாதுகாப்புப் படை, பொலிஸ் மற்றும் அப்பாவி மக்களை நினைவுகூரும் அதே வேளை, இலங்கை இராணுவ வரலாற்றில் பங்களித்த யுத்த வீர மற்றும் வீராங்கனைகளை மீள ஞாபகமூட்டலையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
மேலும், வைபவத்தின் போது ஜெனரல் கோட்டேகொட, புத்தகத்தின் பிரதியை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் அதிதிகளுக்கு வழங்கி வைத்தார்.
இந்த நூலின் ஆசிரியரான ஜெனரல் கோட்டேகொட, இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலங்கை இராணுவத் தளபதியாகவும், பிரேசில் மற்றும் தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவராகவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிகழ்வில்,மேஜர் ஜெனரல் ஏயீடி விஜேந்திர (ஓய்வு) (பிரதம விருந்தினர்), பீல்ட் மார்ஷல் ஜீஎஸ்சி பொன்சேகா, திருமதி. கோட்டேகொட, திருமதி. மோகினி ஜயக்கொடி, திருமதி ஏயீடி விஜேந்திர, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னே, மேஜர் ஜெனரல் பிஜேபி கமகே, மேஜர் ஜெனரல் விஜேசூரிய, மேஜர் ஜெனரல் ஏஎம்யூ செனவிரத்ன(ஓய்வு), மேஜர். ஜெனரல் எஸ்எம்டிஏ ராஜபக்ஷ (ஓய்வு), மேஜர் ஜெனரல் என்ஆர் மரம்பே (ஓய்வு), மேஜர் ஜெனரல் ஜிபிடபிள்யூ ஜெயசுந்தர (ஓய்வு), மேஜர் ஜெனரல் என்ஏ ஜயசூரிய (ஓய்வு), மேஜர் ஜெனரல் பிபி டி சில்வா (ஓய்வு) , மேஜர் ஜெனரல் எல்எம் முதலிகே (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு வட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.