--> -->

சந்தஹிருசேய தூபி இம்மாதம் 18ம் திகதி பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது - பாதுகாப்பு செயலாளர்

நவம்பர் 07, 2021

சந்தஹிருசேய தூபி வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரால் இம்மாதம் 18ம் திறந்த வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக வழங்கப் படவுள்ளதென பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) இன்று (நவம்பர், 07) தெரிவித்தார்

இதற்கமைய நாளைய தினம் சந்தஹிருசேய தூபி கோபுர கலசத்தின் மீது சூடா மாணிக்கம் வைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரம், சந்தஹிருசேய நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிடுவதற்காக இன்று சந்தஹிருசேய நிர்மாண தளத்திற்கு வருகை தந்த அவர், “உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் தூபியின் அங்குரார்ப்பண நிகழ்வினை கண்டுகளிக்க வருகை தர உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், இம்மாதம் 18ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மற்றும் மாண்புமிகு பிரதமர் ஆகியோர் கலந்துகொள்ளும் சூடா மாணிக்கத்தை திரை நீக்கம் செய்யப்படும் இந்த நிகழ்விற்கு மகா சங்கத்தினரும், விசேட அதிதிகளும் வருகை தரவுள்ளனர் என குறிப்பிட்டார்.

முடிவடையும் தருவாயில் உள்ள தூபியின் எஞ்சிய பணிகளை பார்வையிட்டட பாதுகாப்புச் செயலாளர் , ​​சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தேவையான ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.