உள்ளூர் விமானசேவைப் போக்குவரத்துப் பிரிவின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 09, 2019

உள்ளூர் விமானசேவைப் போக்குவரத்து பிரிவின் பிரதிநிதிகள் உட்பட உரிமையாளர்கள் மற்றும் நிறுவன செயட்பாட்டளர்கள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று மாலை (ஆகஸ்ட், 08) சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற நாள் தொடக்கம் விமானம் மற்றும் உலங்குவானூர்தி இயக்குபவர்கள், விமான சேவைப் போக்குவரத்து பயிற்சி நிறுவனங்கள் ஆகியன எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரதிநிதிகள் குழுவினர் வருகைதந்திருந்தனர். பாதுகாப்பு செயலாளர் இதன்போது பிரதிநிதிகள் குழுவினரினால் தெரிவிக்கப்பட குறைகளை நிதானமாக கேட்டறிந்தது தேசிய பாதுகாப்பில் எவ்வித பாதிப்புமில்லாத வகையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறியும் வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி, இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி, விமான மற்றும் விமானப்போக்குவரத்து, மகாவலி அதிகாரசபை, சிவில் விமானசேவைப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய முகவர் நிலையங்கள் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.