பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் அரச நிறுவனங்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் கையளிப்பு

நவம்பர் 08, 2021

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் சில பாதுகாப்பு மற்றும் அரச திணைக்களங்களிடம் வைபவ ரீதியாக பாதுகாப்பு செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்னவினால்  (ஓய்வு)   கையளிக்கப்பட்டது.

இந்த புதிய கண்டுபிடிப்புக்களை பாதுகாப்பு மற்றும் அரச திணைக்களங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு பிட்டிப்பனவில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் இன்று (நவம்பர், 08) இடம்பெற்றது.

இதற்கமைய, டிஜிட்டல் மொபைல் ரேடியோ பேசி, விசேட படை நடவடிக்கைகளுக்கான  ஜிபிஎஸ் கண்காணிப்பு சாதனம், ஜங்கிள் லேன் துப்பாக்கி சூட்டுக்கான ஸ்மார்ட் டார்கெட் சிஸ்டம், பிடிஆர் - பிடிஏ கவச வாகன  சிமுலேட்டர், 81 மிமீ மோட்டார் சிமுலேட்டர், பி வகை வாகன சிமுலேட்டர் மற்றும் ஹைடெக் படைவீரர் திட்டம் ஆகிய புதிய கண்டுபிடிப்புகள்  இலங்கை இராணுவத்திடம்  ஒப்படைக்கப்பட்டது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா,  பிரதம அதிதியான ஜெனரல் குணரத்னவிடமிருந்து இந்தத கண்டுபிடிப்புகளை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை,   இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை (SLAF) ஆகியோரிடம் தலா டிஜிட்டல் மொபைல்  ரேடியோ பேசிகளின் 10 அலகுகள் கையளிக்கப்பட்டன.

மேலும் இலத்திரனியல் செயற்கை கை  இராணுவத்தின்  ரணவிரு செவை இராணுவ வீரர் டீடப்எம்கே பெர்னாண்டோவிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் காட்டு யானைகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்களை முறியடிக்கும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காட்டு யானைகளை விரட்டும் கையடக்க சாதனம் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அத்துடன்,  தேசிய மாணவர் படையணி அதிகாரிகளின் தகவல் அடங்கிய தரவுத்தளம் ஒன்று தேசிய மாணவர் படையணியிடம் கையளிக்கப்பட்டது.

ஆவண முகாமைத்துவ செயலமைப்பு, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவ செயலமைப்பு, கையடக்கத் தொலைபேசி  மற்றும் ட்ரோன்களின் பயன்பாட்டினை செயலிழக்கச் செய்யும் அமைப்பு ஆகியவையும் இந்த  நிகழ்ச்சியின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் பிரிவுத் தலைவர்களினால்  முன்னேற்றம், கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் இதன்போது இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி ஜெனரல் டவேந்திர சில்வா, கடற்படை பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ஒய்.என்.ஜயரத்ன, விமானப்படையின் பிரதம அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.