அவசர நடவடிக்கைகளின்போது உதவ கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

நவம்பர் 09, 2021

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடற்படையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களைச் சேர்ந்த அவசர உதவிக் குழுக்கள் இவ்வாறு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் அவசர உதவி நடவடிக்கைகளுக்காக கடற்படையின் மூன்று நிவாரண குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மேலும் மற்றுமொரு நிவாரண குழு, உடுகம பிரதேச செயலகத்தின் உடமலத்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள நிவாரண குழுக்க அவசர தேவைகளின் போது ஈடுபடுத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.