மஹா ஓயா தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நவம்பர் 09, 2021

மஹா ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய அலவ்வ , திவுலப்பிட்டிய, பண்ணல, வென்னப்புவ, நீர் கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேசங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களின் மேட்டு நிலப்பகுதிகளில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய நிலை உள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன் கிரிவுள்ள ஆற்றின் நீர்மட்டம் 8.94 மீற்றர் உயரம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்தப் பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள நிலைமைகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Details are as follows:

Areas under flood effects