போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

நவம்பர் 14, 2021

கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( நவம்பர்,14) நடைபெற்ற போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த விழா இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களின் நினைவாக இந்த ஞாபகார்த்த தின விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

கொழும்பில் உள்ள போர் வீரர் ஞாபகார்த்த தினம் ஆரம்பத்தில் நவம்பர் 07, 1921 இல் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டது. ,ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது எதிரியின் உளவு விமானங்களை அணுகுவதற்கான முக்கிய அடையாளமாக கருதப்பட்டதால், கல்லறை பின்னர் அகற்றப்பட்டு தற்போதைய இந்த இடத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கலாநிதி ஜெயநாத் கொலம்பகே (ஓய்வு), கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு), கடற்படை, விமானப்படை தளபதிகள், இலங்கை இராணுவத்தின் பிரதான அதிகாரி, இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.