பலத்த காற்று வீசக்கூடும் வானிலை அறிக்கை தெரிவிப்பு
ஆகஸ்ட் 09, 2019நாட்டின் பல பாகங்களிலும் திடீரென பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வடக்கு, வடமத்தி மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், காற்றின் வேகம் (குறிப்பாக மாலை மற்றும் இரவு வேளைகளில்) 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகம் வரை திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் சிலபகுதிகளில் காற்றின் வேகம் 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சீரற்ற காலநிலை காரணமாக மேல், சப்ரகமுவ மாகாணம், மத்திய, தெற்கு, வடமேல் ஆகிய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மன்னார் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட், 09) அதிகாலை 05.30 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின் பிரகாரம் மேற்கு, மத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலநிலை மாற்றம் காரணமாக நீர்கொழும்பிலிருந்து மட்டக்களப்பு கடற்பகுயூடாக மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை வரையான கடல் பிரதேசதம் கடும் கொந்தளிப்பாக இருக்குமென்றும் கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் இருக்குமென்றும், அதனால் கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் கடும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் இதன் வேகம் 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அடுத்த சில நாட்களில் கடல் பகுதிகள் மற்றும் நாடு பூராகவும் நிலவும் தற்போதைய காற்றின் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.