ரஷ்ய பாதுகாப்பு சபை செயலாளர் இலங்கைக்கு வருகை

நவம்பர் 22, 2021

ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிக்கோலாய் பட்ருஷேவ் நேற்றைய தினம் (நவம்பர், 22) இலங்கைக்கு வருகை தந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஷ்ய உயர் மட்ட அதிகாரிகாரிகளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.

மேலும், வருகை தந்திருந்த பிரமுகர்களை வரவேற்க பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு. யூரி பி. மேட்டரியும் கலந்து கொண்டார்.