கிண்ணியாவில் படகுப்பாதை விபத்து- மீட்பு பணியில் கடற்படையினர்

நவம்பர் 23, 2021

கிண்ணியாவில் இன்று காலை (நவம்பர், 23) இடம்பெற்ற சோகமான படகு விபத்தினை தொடர்ந்து, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கடற்படை இறங்கியுள்ளது.

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு அருகாமையில் இந்த துயரசம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்களின் மீட்பு பணிகளை முன்னெடுப்பதற்காக கடற்படையின் அதிரடி படகுப்படைப் பிரிவு, விஷேட படகுப் பிரிவு, மரைன்ஸ் படைப்பிரிவு மற்றும் கடற்படை சுழியோடிகள் என்பவற்றை உள்ளடக்கிய எட்டு மீட்புக் குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது.

இன்று காலை முதல் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் போக்குவரத்திற்காக சேதமடைந்த இந்த படகுப்பதையினை பயபடுத்தி வந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த துயரசம்பவத்தில் உயிரிழந்த ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு கடற்படையின் மீட்புக் குழுக்களினால் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.