ரஷ்ய பாதுகாப்பு சபை செயலாளருக்கு பாதுகாப்பு செயலாளர் பிரியாவிடையளிப்பு

நவம்பர் 24, 2021

ங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் இன்று (நவம்பர், 24) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

விஜயத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பவுள்ள திரு.பட்ருஷேவிற்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வழியனுப்பி வைத்தார்.

இதன்போது இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அதிமேதகு யூரி பி. மட்டேரி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.