57 வது இராணுவ படையணிகளுக்கிடையிலான தடகள போட்டி 2020-2021 நிறைவு
நவம்பர் 26, 2021இராணுவ விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய இராணுவ விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஊக்கமளிக்கும் நிகழ்வான 57 வது இராணுவப் படையணிகளுக்கிடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2020-2021 26 ம் திகதி மாலை கொழும்பு சுகததாச மைதானத்தில் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச வெற்றி எதிர்பார்ப்புகளுடன் நிறைவுபெற்றது.
இராணுவ தடகள குழுவின் தலைவரும் முதலாவது படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில், பிரதம விருந்தினராக பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பங்குபற்றி படையினர்களின் தடகள திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் உற்சாகப்படுத்தினார். மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் அன்பான வரவேற்புக்குப் பிறகு இறுதி போட்டிகளைக் காண்பதற்காக பிரதான மேடைக்கு அன்றைய பிரதம அதிதி அழைத்துச் செல்லப்பட்டார்.
திங்கட்கிழமை (22) ஆரம்பமான தடகள மற்றும் கள போட்டிகளை உள்ளடக்கிய வருடாந்த நிகழ்வில் இராணுவத்தின் அனைத்து படையணியின் தலைமையகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 700 க்கும் மேற்பட்ட இளம் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற இராணுவ விளையாட்டு வீரர்கள் தங்களின் தடகள திறமையை கொழும்பு சுகததாச விளையட்டு மைதானமத்தில் வெளிப்படுத்தினர். மேலும் வெள்ளிக்கிழமை இறுதிப் போட்டிகளுக்கு முன்னதாக, விளையாட்டு வீரர்கள் சிவில் பிரிவில் இருந்து பெறப்பட்ட புகழ்பெற்ற சாம்பியன்களின் வழிகாட்டுதலின் கீழ் இறுதிப் போட்டிக்குத் தயாராகும் பல்வேறு கட்டங்களில் போட்டியிட்டனர். எவ்வாறாயினும், தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இராணுவ தடகளக் குழு தேர்வு போட்டிகள் மற்றும் இன்று இறுதிப் போட்டியின் போதும் தொற்று நோய்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைகளுடன் முன்னெடுத்தனர்.
விருவிருப்பான போட்டிகளைத் தொடர்ந்து, இலங்கை பீரங்கிப் படையணியின் விளையாட்டு வீரர்கள் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றனர். மேலும் 2ம் மற்றும் 3ம் இடங்களை முறையே இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் வீரர்கள் இடம்பிடித்தனர்.
இந்த விருவிருப்பான இறுதி நிகழ்வைக் காண நாட்டிலுள்ள பல புகழ்பெற்ற சிவில் துறை விளையாட்டு வீரர்களுடன், இந்நிகழ்வுக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், வெளிநாடுகளில் பல சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்று, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்த இலங்கை இராணுவத்தின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். .
லெப்டினன் டங்கன் வைட் தலைமையில் 1950 ஆம் ஆண்டு இராணுவ தடகள குழு தொடங்கப்பட்டதில் இருந்து ஒலிம்பிக், காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு, தெற்காசிய விளையாட்டுப் போட்டி, உலக பாதுகாப்பு சேவைகள் தடகளப் போட்டி உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். இலங்கைக்கான ஒலிம்பிக் பதக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கன் மற்றும் சிறந்த பாராட்டுகள் இதுவரை பெற்றுள்ளனர். இது நாட்டிலுள்ள எந்த இராணுவத்தினரும் அடையாத சாதனையாகும்.
இராணுவ தடகள சாதனைகள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அன்றைய பிரதம அதிதி ஒவ்வொரு வெற்றியாளர்களையும் வாழ்த்தி அவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். வண்ணமயமான மற்றும் நிகழ்வுகள் நிறைந்த சாம்பியன்ஷிப் போட்டி நன்றியுரையுடன் முடிந்தது. போட்டிகளின் போது புதிய இராணுவ சாதனைகள், தேசிய அளவிலான சாதனைகள், புதிய விளையாட்டு சாதனை பதிவுகள் மற்றும் இராணுவ தடகளப் போட்டி சாதனைகளை நிறுவிய இராணுவ விளையாட்டு வீரர்களில்; ஒரு இலங்கை சாதனை, மூன்று இராணுவ தடகள சாதனைகள் மற்றும் பதினான்கு போட்டி சாதனைகள் உள்ளடங்குகின்றது.
ஓட்டப்பந்தய வீராங்கனையான கோப்ரல் அமாஷா டி சில்வா, ஒலிம்பிக் வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்கவின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ சாதனையை முறியடித்து 11.67 வினாடிகளில் (ஹேன்ட் டைமிங்) ஓடி இராணுவ தடகள வரலாற்றில் சாதனை படைத்தார். மேலும் இத்த சாதனையை இலங்கை மின்சார மற்றும் பொறியியலாளர் படையணியின் கோப்ரல் ரொஷான் தம்மிக்க 110 மீற்றர் தடைத் தாண்டலில் 14 வினாடிகளில் (13.91 வினாடி) ஓடி மகேஷ் பெரேரா என்ற ஒலிம்பிக் வீரரின் 24 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, முதலாவது படையின் தளபதியும் இராணுவ தடகளக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, பொதுப் பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, பிரதம களப்பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர,இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ தடகள குழுவின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (26) நிறைவு விழாவில் பங்கேற்றனர்.
நன்றி : இராணுவ ஊடகப் பிரிவு