கொழும்பு மாநாடு 2021: தேசிய பாதுகாப்பு மீதான சர்வதேச பரிமாணங்கள்
நவம்பர் 27, 2021பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான முதன்மையான சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் , அதன் இரண்டாவது தேசிய மாநாடான “கொழும்பு மாநாடு -2021” இம்மாதம் 24ம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜில் நடாத்தியது. இந்த மாநாடு “தேசிய பாதுகாப்பு மீதான சர்வதேச பரிமாணங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
இந்த மாநாடு மூன்று முக்கிய அமர்வுகளை உள்ளடக்கியதாக இடம்பெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள 12 சிரேஷ்ட நிபுணர்கள் மூன்று கருப்பொருள் பகுதிகளில் தங்கள் கருத்துக்களா பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.
இம்மாநாட்டின் அங்குரார்ப்பன நிகழ்வில் நிறுவனம் தொடர்பான சிறிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்னவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியான பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய இலட்சினை வைபவ ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் இம்மாநாட்டின் முக்கிய உரையும் நிகழ்த்தப்பட்டது.
"மனித உரிமைகள்: தாக்கங்கள் மற்றும் விளக்கங்கள்" எனத் தலைப்பிடப்பட்டிருந்த இந்த மாநாட்டின் முதல் அமர்வு, பாத்ஃபைண்டர் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவரான தூதுவர் பெர்னார்ட் குணத்திலக்கினால் நடத்தப்பட்டது. இந்த அமர்வின் போது, மனித உரிமைகள் ஒழுங்குமுறைகளை கையாள்வதற்கான முறையான பொறிமுறையை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார். முதல் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணியும்,இலங்கை மற்றும் ஜமைக்கா நாடுகளின் மத்தியஸ்தரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாலி வளாகத்தின் ரெக்டருமான கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா, மனித உரிமைகள் பாதுகாப்பை விட இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் அதிக அக்கறை கொண்டுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் முகாமைத்துவப் பிரிவின் தலைவர் கலாநிதி தெசர ஜயவர்தன, “மனித உரிமை மீறல்கள் மற்றும் இரட்டைத் தரநிலைகள்” என்ற தலைப்பில் சிறப்பான விளக்கத்தை வழங்கினார். மனித உரிமைகளில் படிநிலை இல்லை என்றும் பாரபட்சம் இருக்கக்கூடாது என்றும் பார்வையாளர்களை மதிப்பிட்டார். முதல் அமர்வின் மூன்றாவது பேச்சாளராக சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் திரு.மலிந்த செனவிரத்ன கலந்து கொண்டார். அவர் “மனித உரிமைகள் அரசியல் மயமாக்கல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
"மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான 'வடக்கு மற்றும் தெற்கு' அரசியல் பிரிவு" எனத் தலைப்பிடப்பட்டிருந்த இரண்டாவது அமர்வு முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரான தூதுவர் எச்.எம்.ஜி.எஸ் பலிஹக்கார அவர்களால் வழிநடத்தப்பட்டது. இங்கு அவர் மனித உரிமைகளை அரசியலில் இருந்து பிரிக்க முடியாது என்பதை வலியுறுத்தினார். ஜனாதிபதியின் ஆலோசகரம் சட்டமா அதிபர் திணைக்கள மேலதிக சொலிசிட்டர் ஜெனரளுமாள நெரின் புல்லே, "அவரவர் பார்வையில் யார் பயங்கரவாதி மற்றும் சுதந்திரப் போராளி" எனும் தலைப்பில் உரையாற்றினார். இது இரண்டாவது அமர்வில் குறிப்பிடத்தக்க அளவு விவாதத்தை உருவாக்கியது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் தலைவர் கலாநிதி மனீஷா எஸ் வனசிங்க பாஸ்குவல், “வளரும் நாடுகளை அடிபணியச் செய்வதில் மனித உரிமைகளைப் பயன்படுத்துதல்” என்ற தலைப்பில் தனது கலந்துரையாடலை நடத்தினார். இவர் உரிமைகள், வளர்ந்த நாடுகளுக்கு முன்னால் மௌனமாக இருக்கிறது என்றார். இரண்டாவது அமர்வின் இறுதிப் பேச்சாளர் வெளியுறவு அமைச்சின் இருதரப்பு விவகாரங்கள் (மேற்கு), மேலதிக செயலாளர், தூதுவர் ஏ.எம்.ஜே. சாதிக், இலக்கு தடைகள் அச்சுறுத்தல் குறித்து மேலும் தனது எண்ணங்களை விரிவுபடுத்தினார்.
இறுதி அமர்வு "நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைதல்" என்ற தலைப்பில் இடம்பெற்றது. சிந்தனையைத் தூண்டும் அமர்வாக இருந்த இந்த அமர்வினை வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே வழிநடத்தினார். இலங்கையின் நிலையான அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சமிந்திரி சப்பரமடு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு) மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதி அமர்வின் மூன்று பேச்சாளர்கள். கட்டாய நல்லிணக்கத்தின் தீங்கான விளைவுகள், சமூகத்திற்குள் நிலையான நல்லிணக்கத்தின் தோற்றம் மற்றும் நிலையான அமைதியைப் பாதுகாப்பதில் இராணுவத்தின் பங்கு ஆகிய தலைப்புக்களில் உறையாற்றினர்.
ஒவ்வொரு அமர்வையும் தொடர்ந்தும் கேள்வி பதிலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு உரையாற்றியவர்களினால் பதிலளிக்கப்பட்டது. இது குழு உறுப்பினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு சிறந்த ஊடாடலை உருவாக்கியது. மாநாட்டிற்கு அவர்களின் மகத்தான பங்களிப்பிற்காக, குழு உறுப்பினர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனதினால் அன்பளிப்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டின் இறுதி உரையை பேராசிரியர் ரொஹான் குணரத்ன நிகழ்த்தினார். தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் தொடர்பு மற்றும் வெளியீடுகளுக்கான பணிப்பாளர் ரியர் அட்மிரல் திமுத்து குன்வர்தன நன்றியுரை வழங்கினார்.