விமானப்படை தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியில் வெளிநாட்டு படையீனரும் பங்கேற்பு
நவம்பர் 30, 2021இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் பயிற்சிப் பயிற்சியாளர்களில் பல வெளிநாட்டு படைவீரர்களும் பங்கேற்றனர்.
விமானப்படை ஊடகங்களின்படி, மொரவெவ விமானப்படை நிலையத்தில் உள்ள ரெஜிமென்ட் சிறப்புப் படைப் பயிற்சிப் பாடசாலையில், வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான இல. 01 தேடல் மற்றும் மீட்புப் பாடநெறியையும், அதிரடிப்படை வீரர்களுக்கான இல.02 தேடல் மற்றும் மீட்புப் பயிற்நெறியையும் அண்மையில் நடத்தியது.
பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவைச் சேர்ந்த நான்கு (04) பயிற்சியாளர்கள் இல.02 தேடல் மற்றும் மீட்புப் பயிற்சிப் பிரிவில் பங்கேற்ற அதேவேளை, மேலும் பதினாறு அதிரடிப்படை வீரர்கள் இந்த ஆண்டு ஒக்டோபர் 27 முதல் நவம்பர் 26 வரை நடைபெற்ற இல.01 தேடல் மற்றும் மீட்புப் பாடநெறியில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு மற்றும் அதிரடிப்படை வீரர்களுக்காக இந்தப் பயிற்சி நெறியில், தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம், கடல் மீட்பு, நிலப்பரப்பு மீட்பு, உயரப் பயிற்சி, ராப்பெல்லிங் டவர் பயிற்சி, ஹெலிகொப்டர் ராப்பல்லிங் மற்றும் வின்ச் ஆபரேஷன் பயிற்சி ஆகிய துறைகளில் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டு நட்பு நாடுகளின் ஆயுதப் படைகளுடன் இந்த அம்சங்களில் பரஸ்பர அறிவை மேம்படுத்த இந்தப்பயிற்சி உதவியளிப்பதாக அமைவதாக அது மேலும் கூறுகிறது.
கோவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.