உலக இராணுவ மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இலங்கை 'பெயார் பிளே' விருதை சுவீகரித்தது
டிசம்பர் 01, 2021இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களைக் கொண்ட இலங்கை அணி, ஈரானின் தெஹ்ரான் நகரில் அண்மையில் நடைபெற்ற 35வது உலக இராணுவ மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் "பெயார் பிளே விருது" வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
எயார் கொமடோர் உடுல விஜேசிங்க தலைமையிலான இலங்கைக் குழு அனைத்து நிகழ்வுகளிலும் தீவிரமாகப் பங்கேற்றதுடன், அவர்களின் தொழில்முறை மற்றும் தொழில்நுட்பத் திறன் காரணமாக விருதைப் பெற்றுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை அணியில் 61 கிலோ எடைப் பிரிவில் கோப்ரல் உதார பெர்னாண்டோ, 74 கிலோ எடைப் பிரிவில் விமான வீரர் லக்மால் விஜேசூரிய, 92 கிலோ எடைப் பிரிவில் விமான வீரர் நிஷான் வல்பிட மற்றும் 125 கிலோ எடைப்பிரிவில் விமான வீரர் ருவன் கல்யாண, குரூப் கேப்டன் எரந்திகா குணவர்தன மற்றும் லெயிட்கா குணவர்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விஜேசிறி பெர்னாண்டோ முறையே அணி முகாமையாளராகவும், விமானப்படையின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.